AYEE AMMAN TEX Thangaraj
Reading streak1 days
Chapters read108

Public Highlights

"இளைய யாதவர் சிரித்து “ஆம், அவர் தன் சொல்லை தெய்வங்களின் ஆணைக்கு நிகரென தன் தலைமேல் சூடிக்கொள்பவர். தன்னை தெய்வமென எண்ணும் நிமிர்வுகொண்டவர்கள் சிக்கிக்கொள்ளும் பொறி அது” என்றார். "

panniru-padaikkalam - Chapter 35

"இந்திரப்பிரஸ்தம் மகதத்துடன் போர்தொடுக்கக்கூடும் என்கிறார்கள். நாம் மகதத்தை படைத்துணை செய்யப்போவதில்லை என்பது காந்தாரர் சகுனியின் எண்ணப்படி நாமிட்ட ஆணை” என்றார் விதுரர். அவரை இடைமறித்து மிகமெல்லிய குரலில் துரியோதனன் “இது என் ஆணை!” என்றான். அவன் உன்னிய பொருளனைத்தையும் உணர்ந்துகொண்டு விதுரர் உடல்குன்றி"

panniru-padaikkalam - Chapter 30

"நெறி நீடிக்கவேண்டுமென்று விழையும் அரசன் பிழை பொறுக்கும் உளவிரிவையும் அடைந்தாக வேண்டும்.”"

panniru-padaikkalam - Chapter 30

"முறைமைப்படி வருவதற்கு தயங்குபவனல்ல தருமன்” என்றான் அஸ்வத்தாமன். “பணிவதில் பெருவிருப்புள்ளவனாக இருக்கிறான். பணியும்போது அவனுள் நான் அறத்தான் என ஒரு குருவி சிறகடித்துக் கூவுகிறது என ஒரு சூதர்சொல் உண்டு."

panniru-padaikkalam - Chapter 30

"உண்பதற்குப் போராடும் வாழ்க்கையிலிருந்து வென்றுசெல்லும் வேட்கைகொண்ட எவரும் எழுவதில்லை. ஏனென்றால் ஒவ்வொருநாளும் உண்பதற்குத் தேடியடைவதென்பது முழுஆற்றலையும் கொள்ளும் செயல். அத்துடன் அது ஒரு மானுடன் விழையும் முழு உவகையையும் அளிக்கும் வேட்டையும்கூட. வெற்றி என்பதும் வல்லாண்மை என்பதும் உண்பதற்கான வேட்டையை ம"

panniru-padaikkalam - Chapter 14

"தென்னகத்திலிருந்து இறுதியாக வந்த முதுமருத்துவர்  சாத்தன் அகத்தியர்வழித்தோன்றல் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். நீள்தாடி நிலம்தொடும் குற்றுருவத்தினர். ஒளிக்கண்களும் மணிக்குரலும் கொண்டவர். அரசர் இருவரையும் அணுகி நோக்கி, நாடிதேர்ந்தபின் திரும்பி “நோயென ஏதுமில்லை” என்றார். சூரர் புருவம் சுருக்கி நோக்கி"

panniru-padaikkalam - Chapter 4

"தன் நோயை நமக்குக் காட்டுவது வரை நாம் நம்பிக்கை கொள்ள இடமுள்ளது. நோயை காட்டுகையில் என்னை சீரமை என்று நம்மிடம் அது கோருகிறது. நோய் என்பதே மருந்துக்கான கோரிக்கை மட்டும்தான். எங்கோ மருந்து உள்ளது.”"

panniru-padaikkalam - Chapter 4

"நீங்கள் தீது சூழ்ந்து கவலைகொள்கிறீர்கள் ஆசிரியரே. மீளவும் வாழவும்தான் வாழ்பவர் உள்ளம் என்றும் விழைகிறது. புண்களை ஆற்றிக்கொள்ள உடல் விழைவதனால்தான் நாம் மீண்டுஎழுகிறோம்” என்றார். சபரர் ஐயம்நிறைந்த விழிகளுடன் திரும்பி நோக்கி “ஆம்” என்றார். தாடியைத் தடவியபடி “ஆனால் உடல் போல கள்ளமற்றதல்ல உள்ளம். அது அழிய"

panniru-padaikkalam - Chapter 3

"பெருந்துயரில் இருப்பவனும் பெருங்களியாட்டில் மலர்ந்தவனும் பிறவியியல்பை, குலப்பண்பை, கல்வியை, நுண்ணுளத்தை இழந்திருக்கிறார்கள்."

veyyon - Chapter 71
Explore Venmurasu

venmurasu.in