"“பார்த்தா, உண்ணாநோன்பு கொண்டவன் பசியாலும் நோயாளன் வலியாலும் தவமியற்றுவோன் துயராலும் விடுதலையடைகிறார்கள் என்பது தொல்நூல் கூற்று” என்றார் இளைய யாதவர்."
"ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திற்குள் காமத்தையும் போரையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். புணராப் பெண்களாலும், கொல்லப்படாத எதிரிகளாலும் ஆனது ஆண்மகனின் அகம்.”"
"உள்ளத்தின் விசையை உடல் தவறவிட்டு நின்றுவிடுகையிலேயே தசைகள் கொழுப்பேறி பருக்கின்றன. நதி விரைவழிந்து தேங்குவதுபோல. உள்ளத்தின் விசையை உடலும் அடைகையில் உடல் இருப்பதையே உள்ளம் உணராது. வாளில் பிடியே எடை மிக்கதாக இருக்கவேண்டும், உடல் உள்ளத்தை ஏந்தியிருக்கும் பீடம்.”"
"“இப்போர் என் சொல் வெல்வதில் மட்டுமே முடியும். பிறிதெவ்வகையிலும் இது முடியாது. உங்கள் பொருட்டு நீங்கள் இதை நிகழ்த்தவேண்டுமென்பது என் ஆணை. அது நிகழுமென்று அறிந்திருக்கிறேன். என் பொருட்டென்றால் நான் இமைப்பதுபோல் இதை ஆற்றுவேன். ஆற்றுதலும் ஒழிதலும் எனக்கு வேறுவேறல்ல என்றும் இருப்பேன்” என்றார் இளைய யாதவர்"
"அவியிட்டு தேவர்களை வளர்க்கும் வைதிகர் தங்களைத்தான் வளர்த்துக்கொள்கிறார்கள். மண்ணில் இருந்து ஒரு துளி நெய்யோ அன்னமோ செல்லாவிடினும் தேவர்கள் குறைபடுவதில்லை என்றுணர்க! நீங்கள் அறியும் தேவர் வளரும் பொருட்டே உங்கள் வேள்விகள் இயற்றப்படுகின்றன. இந்த அவையிலிருந்து இப்போதெழுந்து இன்று அந்தியில் கதிர் மேற்கும"
"என் பொருட்டு இங்கு நின்று போரிடும் ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன். உங்கள் எவராலும் நான் பேணப்படுவதில்லை, காக்கப்படுவதுமில்லை. என் சொற்களின் பொருட்டு நீங்கள் போரிடவில்லை, விதைத்த வயலைச் சூழ்ந்து வேலியிடுகிறீர்கள் என்று உணர்க!”"
"பெரியவர்கள் தோற்றாக வேண்டும். மிகப் பெரியவர்கள் முற்றாக தோற்கவேண்டும். அதுவே இவ்வுலகின் நெறி” என்றான் கடோத்கஜன். இளைய யாதவர் “ஆம், மெய்” என்று அவன் தோளில் தட்டியபின் வெளியே நடந்தார்"
"அவர் இக்களத்தில் வெல்வார்” என்றான் கடோத்கஜன். “ஆனால் முழுமையாகவே தோற்பார்.”"
"நெடுநேரம் கடந்து “குருதியில் அல்லாது அறம் நிலைகொள்ள முடியுமா?” என்றான் அசங்கன். கடோத்கஜன் “இயலவேண்டும். அவ்வாறொன்று எழவேண்டும்” என்றான். உத்துங்கன் “அது நம் மூதன்னையர் ஆண்ட நாட்களை போலிருக்கும்” என்றான்."
"மண்ணுக்காக அல்ல. அறத்துக்காக. பாரதவர்ஷத்தை ஆளும் தொல்வேதங்களை வென்று அறத்திலமைந்த நாராயணவேதம் நிலைகொள்வதற்காக” என்றான். “ஆம், அவ்வாறு சொன்னார்கள்” என்றான் கடோத்கஜன். “ஆனால் அந்த வேதங்களே மானுடருக்காகத்தானே?” என்றான். “ஆம், ஆனால் அது நாளை வரவிருக்கும் தலைமுறைகளுக்காக. இன்று மானுடர் அதை உயிர்கொடுத்து "
"வில்லென்று மண்ணில் வந்த சிவம்."
"விண்ணிலிருந்து ஓர் எரிவிண்மீன் உதிர்வதென்றால் பெருவீரர், பேரறத்தார்கள், அறிவமர்ந்தோர், முனிவர் என எவரேனும் அங்கே சென்றிருக்கவேண்டும். அவர்களுக்கான இடத்தை அளிக்கும்பொருட்டு அவை உதிர்கின்றன. ஏனென்றால் விண்ணில் ஒரு விண்மீன்கூட கூடவோ குறையவோ முடியாது. அவற்றை எண்ணி அடையாளமிட்டு நிரத்தியிருப்பது பிரம்மம்."
"முதியவர் இளமைந்தரை கனிந்து எதிர்கொள்வார் என்று எண்ணியதைப்போல் பிழை பிறிதில்லை. தந்தையாயினும் மூதாதையாயினும் உடலால் உள்ளத்தால் அவர் முதியவர் என்பதே முதன்மையானது. மண்ணிலுள்ள அனைத்து இளையவரும் முதியவர்களுக்கு எதிரிகளே. அவர்கள் கொண்டுள்ள இளமையால், அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்க்கையால், எங்கும் முதுமை"
"முதியவர் இளமைந்தரை கனிந்து எதிர்கொள்வார் என்று எண்ணியதைப்போல் பிழை பிறிதில்லை. தந்தையாயினும் மூதாதையாயினும் உடலால் உள்ளத்தால் அவர் முதியவர் என்பதே முதன்மையானது. மண்ணிலுள்ள அனைத்து இளையவரும் முதியவர்களுக்கு எதிரிகளே. அவர்கள் கொண்டுள்ள இளமையால், அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்க்கையால், எங்கும் முதுமை"
venmurasu.in