"அவன் நெஞ்சு திடுக்கிட்டு பின் ஓசையுடன் உருண்டு சென்றது. மூச்சைத் திரட்டி “அதனால் பழி சேர்ந்தால்?” என்றான். “அது ஊழ். அப்பழியை தானே முழுதேற்றுக்கொள்ளவேண்டும். துறந்து கானேகி தவம்செய்து அதை வெல்லவேண்டும். அல்லது பிறந்து பிறந்து கரைக்கவேண்டும்” "
"எதன்பொருட்டு ஒருவன் தந்தையின் ஆணையை மீறலாம்?” என்றான். அவர் “எதன்பொருட்டும் அல்ல” என்றார்."
"“ஓர் உயிரைக் கொன்ற பழியை எத்தனை உயிரைக் காத்தால் நிகர்செய்ய முடியும்?” என்றான். அவர் “கற்கண்டு?” என்றார். அவன் அவர் மடியிலிருந்தே எடுத்து நீட்ட அவர் முகம் மலர்ந்து அதை பிடுங்குவதுபோல வாங்கி வாயிலிட்டு மென்றார். கண்கள் சொக்கின. அவன் அவர் தொடையைப் பிடித்து உலுக்கி “சொல்லுங்கள்” என மீண்டும் கேட்டான். அ"
venmurasu.in