"2014-ல் என் இணையதளத்தில் வெண்முரசு தொடராக வெளிவரத்தொடங்கியது. அவ்வாண்டே முதல் நூலாகிய முதற்கனல் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது."
"புனைவை மெய்மை நோக்கி கூராக்கி கொண்டு செல்கின்றன. வெவ்வேறு தொல்புராணங்களை ஒன்றுடன் ஒன்று அடுக்கித் தொடர்புபடுத்துதல் வழியாகவும், புராணச்"
"இந்நாவல் ஒரு விதை. இதைத்தொடர்ந்து வரும் பிற நாவல்கள் பெருமரங்கள். எட்டாண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரம் பேர் வெண்முரசை படித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு பெரும்படைப்பு"
"அவை மெல்ல மெல்ல களையப்பட்டு தூய தமிழ் நோக்கிச் செல்கின்றது இதன் வளர்ச்சிப் போக்கு. வெண்முரசு நாவல் முழுக்க அதன் மொழிநடைக்கு ஒரு மெல்லிய ஓசை ஒழுங்கு உண்டு. அந்த அகஒலியிசைவு இந்நாவலில் முதல் வரியிலேயே தொடங்கிவிட்டிருக்கிறது."
"முதற்கனல் அவ்வேள்வியின் தொடக்கமாக அரணிக்கட்டைகளை உரசி வெப்பமூட்டி எழுப்பிய முதல்பொறி. பின் அது நெய்யில், அவியில் எரிந்தேறி இறுதியில் வேள்விச்சாலையையே உண்டு சாம்பலை மட்டும் எஞ்சவிட்டு விண்ணேகியது."
"அந்த முதல்நாகத்தின் உடல் என்றென்றும் அசைவே இல்லாமல்தான் கிடந்தது. ஏனென்றால் வானத்திலிருந்த இடத்தை முழுக்க அதுதான் நிறைத்திருந்தது."
"‘இது நான்’ என சொல்லிக்கொண்டது. ‘இருக்கிறேன்’ என்று அறிந்தது. ‘இனி?’ என்று கேட்டுக்கொண்டது. அந்தச் சொற்கள் அதனுள் அகங்காரமாக மலர்ந்தபோது அதன் தலையில் படம் விரிய ஆரம்பித்தது. பின்பு பல்லாயிரம் கோடி தலைகள் முளைத்தெழுந்து படம்விரித்தன."
"நாகர்குலத்தவர் வாழும் சின்னஞ்சிறு மலைக்கிராமத்தை சுற்றிலுமிருந்த காட்டிலிருந்து வந்த கடும்குளிர் வளைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த நேரம்"
"ீல நீரோடும் கிருஷ்ணை"
" இரண்டு கண்களாக அத"
"வேசரதேசத்தில் கருந"
"மூவாமுதலா உலகம்’ என சீவகசிந்தாமணி தொடங்குகிறது. வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண்."
"முதலாவிண் என்னும் இந்நாவலுடன் வெண்முரசு நாவல்நிரை முடிவடைகிறது. 2014ல் இந்நாவலை "
"முதலாவிண் என்னும் இந்நாவலுடன் வெண்முரசு நாவல்நிரை முடிவடைகிறது. 2014ல் இந்நாவலை எழுதத் தொடங்கிய இடத்தில் இருந்து அறிவாலும், அதைக்கடந்த அகப்பயணத்தாலும் நெடுந்தொலைவு வந்துவிட்டேன். இன்று நான் உணரும் பெருமிதமும் பெரும்பணிவும் ஒன்றே என்று தோன்றுகிறது. இங்கு வந்துசேர நேர்ந்தது குருவருளே."
"தனிமை ஆயிரம் பல்லாயிரம் சுவர்களை எழுப்பிக்கொண்டு தலைவாயிலைத் திறந்திட்டு காத்திருக்கிறது. விண்ணென விரிந்த பெருந்தனிமை துளித்துத் திரண்டு சொட்டியதென தோன்றிய சின்னஞ்சிறிய தீவுக்கு ஏகத்வீபம் என்று பெயர். பன்னிரண்டுசுற்று பெருமலைகளுக்கு அப்பால் கரைநாணல்களால் முழுமையாக மறைக்கப்பட்ட கர்கசாகரம் என்னும் ஏரி"
"புனைவு, அன்றாட வாழ்வில் அதன் தர்க்கங்களுடன் நிகழ்வதென்பது வாசகனில் ஒரு நம்பிக்கையை உருவாக்குவதற்கு மட்டுமேயன்றி அதற்கப்பால் பெரிய மதிப்பு கொண்டதல்ல. அன்றாட வாழ்க்கையின் மெய்யான இடர்களைக்கூட அன்றாட வாழ்க்கைக்குள் வைத்து சரியாகப் புனைந்துகொள்ள முடியாதென்பதை நல்ல எழுத்தாளன் அறிந்திருப்பான். ஆகவே தூய ய"
"99 வயதான எனது பெரியம்மா தாட்சாயணி அம்மாவை, 90ஐ நெருங்கும் எனது பெரிய மாமியை சந்தித்தேன். அவர்களிடமிருந்த நிமிர்வும் பேரியல்பும் என்னை ஆழ்ந்த நிறைவொன்றுக்கு செலுத்தின. தங்களுக்கென உரிமையாக நிலமும் பொருளும் இருந்தமை அவர்களின் அந்த நிமிர்வுக்கு முதன்மைக் காரணம் என்று அருண்மொழியிடம் சொன்னேன். என்றும் எந"
"கர்ணனுக்கு அளிக்கப்பட்ட சூரியனின் கூறு பலவகையில் அவனுடைய ஆளுமையாக விரிகிறது. சூரியன் அள்ளிக்கொடுப்பவன். எங்கிருந்தும் எவரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளாதவன். தன்னெறியில் மாறாது ஒழுகுபவன், ஒளிமிக்கவன். தன் பாதையில் முற்றிலும் தனியன். இவை அனைத்துமே கர்ணனின் ஆளுமை சித்திரத்திற்கு முற்றிலும் பொருந்த"
"நான் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்ய முயன்றது அதை இன்றைய அரசியல் சமூகவியல் சூழல்களுக்கு கொண்டு வந்து இன்று செல்லுபடியாகக்கூடிய எளிய உலகியல் உண்மைகளை அதில் கண்டடைந்து நிறுவுவதற்காகவோ இன்று என்னிடம் உள்ள உலகியல் அறிதல்களைக் கொண்டு அப்பெரும் படைப்பை மதிப்பிடுவதற்காகவோ அல்ல. மாறாக இன்றும் என்னைத் தொடர்ந்து"
"என்னில் இருந்த அனைத்து இருளையும் நானே பார்த்தேன். கட்டுக்கடங்காத பெரும் காமத்தை, கீழ்மையிலிருந்து கீழ்மைக்கு செல்லும் பெரும் அகந்தையை, ஒவ்வொன்றையுமே தொட்டு வெறுமையாக்கும் பெரும் வெறுமையை, எடைதாளாமல் மண்டையை வெடிப்புறச் செய்யும் மாபெரும் தன்னிலைமையத்தை."
"முடிவின்மையின் முதல் தொடுகை. இந்தப்பாதையின் முதல் திறப்பு. தன் எல்லைகளை தானே உளம் கடக்கும் நிலை. பிறிதொன்று வந்து தொடும் புள்ளி. அது நிகழ்ந்ததுமே பரவசம் கொள்கிறோம். ஆம் இதோ என்று உள்ளம் துள்ளுகிறது. பிறிதொன்றும் முக்கியமல்ல என்றாகிறது. அதற்கு முழுக்க தன்னை கொடுத்துவிடவேண்டும் என்று தோன்றுகிறது. ஓர் "
"மகாபாரத கதாபாத்திரங்களை மானுடம் இன்றைய கணம் வரை வந்து சேர்ந்திருக்கும் வாழ்வின் அலைகளைக்கொண்டும், அடிப்படை உணர்வுகளைக்கொண்டும், அவற்றின்மேலான அறிதல்களைக் கொண்டும் புரிந்துகொள்ள இந்நாவல் முயல்கிறது. "
"ஊழென்று இங்கு சொல்வது ஒவ்வொருவரையும் ஒற்றைப் பெருஞ்செயற்பெருக்கு ஒன்றில் இணைக்கும் அந்த நிகழ்வுத்தொடர்வலையை. அல்லது இங்குள்ள அனைத்திற்கும் பின்னாலிருக்கும் அறியமுடியாத செயல்திட்டத்தை. அல்லது ஒன்றென்றிலங்கி பலவென்று காட்டி என்றென்றுமிருக்கும் ஏதோ ஒன்றை."
"ஊழென்று இங்கு சொல்வது ஒவ்வொருவரையும் ஒற்றைப் பெருஞ்செயற்பெருக்கு ஒன்றில் இணைக்கும் அந்த நிகழ்வுத்தொடர்வலையை. அல்லது இங்குள்ள அனைத்திற்கும் பின்னாலிருக்கும் அறியமுடியாத செயல்திட்டத்தை. அல்லது ஒன்றென்றிலங்கி பலவென்று காட்டி என்றென்றுமிருக்கும் ஏதோ ஒன்றை."
"ஆரம்பித்தாள். இருள் முதல்"
"அதன்பிறகு அதன் அகத்தில் ஒரு "
"தேவி இருளைப்பற்றித்தான் சொல்ல "
venmurasu.in