"ஒரு பிசிறுகூட இல்லாத முழுமை. அது மானுடருக்கு இயல்வதுதானா? அப்படியென்றால் இது உயிரற்ற வெளி. இங்கு தெய்வங்களுக்கு இடமில்லை. முன்நிகழாத கணத்தில், எதிர்நோக்கா திசையில் எழுந்தருள்பவை தெய்வங்கள். ஆகவே அவை பிழையில் வாழ்பவை. அவனைப்போல பிழைகளைத்தான் அவையும் நோக்கியிருக்கின்றன. நாகம் சுவர்விரிசலைத் தேடுவதுபோல"
"ஒடித்து மடித்து ஒடுக்கி உருவாக்கப்படுவதே மானுட ஒழுங்கென்பது. முற்றொழுங்கு. ஆயினும் எங்கோ ஒரு பிழை இருக்கும். அப்பிழையில்தான் மானுடத்தின் உண்மையான வேட்கை இருக்கிறது. படைப்பதற்கும் வென்றுசெல்வதற்குமான துடிப்பு இருக்கிறது. எங்கோ ஒரு பிழை. "
venmurasu.in