"ஒன்றுபிறிதொன்றைக் கண்டடைந்து நிறைத்து தானழிவதே உயிர்களுக்கு விண்ணென்றானது வகுத்தளித்த பேரின்பம் என்று அறிந்தான்"
"உண்டு கொண்டு புணர்ந்து கொன்று அடையும் அனைத்து உவகைகளையும் அடைந்தபின் வெறுமை எஞ்சுவதைக் கண்டு மேலும் வெறிகொண்டேன்."
"அச்சமே மானுடன் எனும் ஒழுக்கின் கரை. பகையை, பழியை, இறப்பை, ஊழை அஞ்சாதவன் அறத்தையும் அஞ்சாதவனே."
venmurasu.in