"தந்தையை வெல்லாதவனை மகள்மனம் ஏற்காது என்றறிவாயா"
"ஆனால், அது வெறும் அகங்காரம். தூய அறிவென்று ஏதுமில்லை. அறிவதெல்லாம் நம்முள் சென்று அகங்காரமாகவே மாறுகிறது. அறத்தால் வழிநடத்தப்படும் அறிவு மட்டுமே மனிதனுக்கு பயன் தரக்கூடியது"
"மனிதனுக்கு அறிதல் என்பது இறைசக்திகளால் அளிக்கப்பட்ட ஆணை. சின்னஞ்சிறு கைக்குழந்தை அதற்குள் பிரக்ஞை கொளுத்தப்பட்ட கணம் முதல் அறிவு அறிவு என்று தேட ஆரம்பிக்கிறது. அறிவு தூயது, மகத்தானது, நன்மை பயப்பது என்று நாங்கள் எண்ணினோம்… நாங்கள் அறிவையே பிரம்மம் என்று எண்ணிய குருமரபினர். பிரக்ஞானம் பிரம்ம: என்பதே "
"மனிதனுக்கு அயலான விலக்கப்பட்ட ஞானம் எதுவுமே இல்லை என்பார் என் தமையனார். அறிவை அடையும் வழிகளையெல்லாம் அந்த அறிவே நியாயப்படுத்தும் "
"நம்மைமீறிய பெரும் அழிவுச் சக்திகளுக்கு நாம் கருவிகளாகி விடும் வாய்ப்பு இருக்கிறது"
"குரோதம் என்பது அக்கினி போன்றது. அக்கினி மகா அக்கினியையே பிறப்பிக்கிறது"
"குரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும்"
"திசைகளில் முதன்மையானது வடதிசை. மானுடன் முதலில் வகுத்த திசை அதுவே. அங்கேதான் விண்ணின் மாறாத மையப்புள்ளியாக துருவன் நிலைகொள்கிறான்"
"தங்கள் ஊனம் மீது தொட்டுத்தொட்டுச் செல்லும் பிறர் பார்வையை வெல்லும் வழி அந்த ஊனத்தையே ஏளனத்துடன் தூக்கிக் காட்டுவதுதான் என்று கற்றவர்கள்."
"நெருப்பை வளர்ப்பதுபோல புனிதமானது ஏதுமில்லை. நெருப்புக்கு அவியிடுவதைப்போல மகத்தானது ஏதுமில்லை. நெருப்பில் மூழ்கி அழிவதுபோல முழுமையும் வேறில்லை"
"நெருப்பென்பது அழிவு. ஆக்கத்தை விட ஆயிரம்கோடி மடங்கு பெரியது. ஆக்கத்தைவிட இறைச்சக்திகளுக்கு விருப்பமானது. ஆகவேதான் வேள்விக்குளங்கள் தோறும் அது நின்றெரிகிறது. சொல்லப்போனால் இங்கே உள்ளவை இரண்டே. நெருப்பும் நெருப்பு அல்லாதவையும். நெருப்பல்லாத அனைத்தையும் உண்ணுவதே நெருப்பின் இயல்பென்பதனால் பசியும் உணவுமன"
"நெருப்பு ஒரு நாக்கு. விண்ணை நோக்கி அது மண்ணின் அழியாத சொல் ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கிறது. நெருப்பென்பது மண்ணிலிருந்து விண்ணுக்குச் செல்லும் தெய்வங்களின் ஒளிமிக்க பாதை. ஒவ்வொரு கணமும் இப்புவியை அழித்துக்கொண்டே இருக்கும் ஒன்றை நம்பி இங்கு நாமெல்லாம் வாழ்கிறோம் என உணர்ந்திருக்கிறோமா"
"இப்புவியில் உள்ள அனைத்தும் இருத்தல் கொண்டவை. ஒன்றே ஒன்றுதான் அழிதலே இருப்பாகக் கொண்டது. காலத்தையும் வெளியையும் சுமந்துகொண்டிருக்கின்றன அனைத்தும். நெருப்போ அவற்றை ஒவ்வொரு கணமும் உதறிக்கொண்டிருக்கிறது. நெருப்பென்றால் என்ன என்று எண்ணினீர்கள்? நெருப்பென்றால் நெளிவு. மாட்டேன் மாட்டேன் என உதறும் விரைவு. வ"
"உண்ட உணவு எஞ்சியிருந்தால்தான் நஞ்சாகும்… உணவில்லை என்றால் என் உடலின் அனலில் குருதிகூட எரிந்தழியக்கூடும்"
"துருவனை தனிமையின் ஒளிப்புள்ளி என்று சொல்வேன். இத்தனை பெரிய இருள் சூழ்ந்திருக்கையில்தான் அந்தத் தனிமையின் ஒளியின் அழுத்தம் கூடுகிறது. தனித்திருப்பதன் குளிர். சொல்லின்மையின் எடை. வானில் தனித்திருப்பது எப்படிப்பட்டது"
"எத்தனை பெரிய தனிமை. அதை நம்மிடம் சொன்னது யார்"
"இரவு எவ்வளவு மகத்தானது. இருட்டைப்போல அழகுள்ளது எதுவும் இல்லை. அது நம்மை தனித்துவிட்டுவிடுகிறது. நம் உடலை நாம் பார்க்கும் வதையை வெல்கிறோம். நம் நெஞ்சு நேரடியாகவே இருளில் கரையமுடியுமெனத் தோன்றுகிறது. அங்கே விண்மீன்கள் இருளில் வெறும் உணர்வுகளாக எண்ணங்களாக ஆன்மாவாக நின்றிருக்கின்றன."
"நெருப்பின் பசிக்கு அளவே இல்லை. அதை உணவு அணைக்கமுடியாது. உண்ணும்தோறும் வளரும் பசி என்றால் நெருப்பு மட்டுமே. நெருப்பைவிட ஆற்றல்மிக்க ஏதும் இப்புவியில் இல்லை. பிரம்மத்தின் புன்னகை ஒளி என்றால் அதன் சினமே நெருப்பு"
"இப்புராணக்கதையின் பொருளை அறிய யோகநூலை கற்றுத்தெளியவேண்டும். பரம்பொருளின் ஒருதுளியே பெருவெளி. அகண்டாகாசம் என அதைச் சொல்கின்றன யோகநூல்கள். அதை நிறைக்கும் பாலொளிப்பெருக்கு மண்ணில் இறங்குவது மானுடனின் அகவெளியிலேயே. அதை சிதாகாசம் என்கின்றன யோகநூல்கள். விண் நிறைத்து சித்தம் நிறைத்து பின் மண் நிறைத்துப் பெ"
"அவன் தவத்தால் மண்ணில் இறங்கிய பெருக்கையே பாகீரதி என்கிறோம். அலைகளாக எழுந்தவள். ஆயிரம் கோடி கரங்களாக விரிந்து அமுதூட்டுபவள். வேரில் நீராகவும் கனியில் அமுதாகவும் மலர்களில் தேனாகவும் நிறைபவள்."
"ஊழி உதித்து ஆழிவிரிந்து குமிழியென புவி எழுந்து உயிர்தழைக்கும் காலம்வரை பகீரதன் தவமிருந்தான்"
"விண்ணில் வாழும் வேதத்தின் ஒருதுளியே மண்ணுக்கு இதுவரை வந்திருக்கிறது"
"முயற்சிசெய். தலைமுறைக்கொருமுறை ஒருவனை இறைசக்திகள் தேர்வுசெய்கின்றன. மானுடத்தின் ஆற்றலையும் எல்லைகளையும் தாங்களே சோதித்து அறிந்துகொள்வதற்காக"
"ஸ்வப்னத்தில் இருந்து அவை சுஷுப்திக்கு சென்றாகவேண்டும். அங்கிருந்து துரியத்தின் முடிவிலியில் உதிர்ந்து மறையவேண்டும். அலையடிக்கும் ஸ்வப்னத்தின் கடலில் சில துமிகள் இவ்வாறு திசைமாறி ஜாக்ரத்தில் வந்து தெறித்துவிடுகின்றன"
"மானுட உள்ளத்தை ஆயிரம்தலைகொண்ட நாகம் என்றே நூல்கள் சொல்கின்றன. ஈராயிரம் விழிகள். ஆயிரம் நாவுகள். ஆயிரம் தலைக்குள் ஆயிரம் எண்ணங்கள். அதன் ஒற்றை உடல் அவற்றையெல்லாம் இணைத்து ஒன்றாக்கி வைத்திருக்கிறது. எனினும் எவருக்குள்ளும் அவை ஒன்றுடன் ஒன்று முட்டிமோதிக்கொண்டுதான் இருக்கும்"
"மகத்தான தவங்களே மகத்தானவை மண்ணிலிறங்க படிக்கட்டுகளாகின்றன"
"அன்னையின் ஆடை நுனிபோதும் மகவுக்கு, அன்னையை அறிய"
"மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன"
"மாசடைந்த அகத்துடன் ஆற்றும் எச்செயலும் பாவமே. அது குற்றவுணர்வையே உருவாக்கும்"
"உன் குற்றவுணர்வை நீ வென்றால் உன் அகங்காரம் தணியும். உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பை நீ எளிதாக கடந்துசெல்வாய்"
"உன்னை வதைத்தது உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பு மட்டும் அல்ல. உன்னுள் வாழ்ந்த குற்றவுணர்ச்சியும்கூடத்தான்"
"அவர் உனக்கிழைத்த பிழைக்கும் உனக்கும் தொடர்பில்லை. அது அவர் தீர்த்தாகவேண்டிய கடன். நீ தீர்க்கவேண்டிய கடன் நீ இழைத்த பிழை மட்டுமே."
"அகங்காரமே மிகப்பெரிய பாவம். அது அழியட்டும்."
"அகங்காரத்தைக் குளிரச்செய்யும் எதையாவது செய்யலாம். ஆனால் அது நிரந்தரத் தீர்வல்ல"
"புண்பட்டு அழுகிய உறுப்புகளை வெட்டி வீசுவதே மருத்துவமுறை. உன் அகங்காரத்தை அகற்றுக. அது ஒன்றே உன்னை மீட்கும்"
"ஏனென்றால் இழப்பில் உன் அகங்காரம் சீண்டப்படுவதில்லை. அவமதிப்போ அகங்காரத்தின் வதை"
"இழப்பை அனைவருக்கும் அறிவிப்பார்கள். எண்ணியும் சொல்லியும் வளர்ப்பார்கள். அது வெடித்துச் சிதறி பின் அழியும். அவமதிப்பை வெளியே தெரியாமல் புதைத்துவைப்பார்கள். வீட்டு அறைக்குள் பிணத்தை ஒளித்துவைப்பதுபோல"
"திரும்பிவரமறுக்கும். மேலும் மேலும் தன்னை சிதறவைத்துக்கொண்டே இருக்கும்."
"ரதசாலையில் செல்ல நாணுபவன் ஊடுவழிகளில் புகுந்து காட்டில் மறைவதுபோல ஆன்மா புதுவழிகளை கண்டுபிடிக்கிறது. இழப்பிலும் அவமதிப்பிலும் அக உலகம் சிதறிப்பரக்கிறது. அதை மீண்டும் தொகுத்துக்கொள்ள ஆன்மா படும் பதைப்பையே நாம் துயரம் என்கிறோம். தொகுத்துக்கொள்ளவே முடியாது என அது எண்ணும் கணத்தில் சிதறவிடுவதையே தன் வழிய"
"கானகவாழ்க்கை ஆற்ற முடியாத துயரமேதும் மானுடர்க்கில்லை"
"நீரோட்டம் வழியாக மலையிறங்கி வந்த வெண்ணிறமான உருளைக்கற்கள் பரவிய பரப்பில் நுரையும் கலக்க பனிப்பரப்பு போல ஒளியுடன் விழிகளை நிறைத்தது கங்கை. நூற்றுக்கணக்கான புலிகள் சேர்ந்து உறுமியதுபோல அங்கே நீரின் ஓசை நிறைந்திருந்தது."
"எந்தத் தந்தையும் மைந்தர்கள்மேல் தீச்சொல்லிடுவதில்லை. என் வாயால் நீ வெற்றியும் புகழும் நிறைவும் கொண்டு நீடூழி வாழ்கவென்று மட்டுமே சொல்லமுடியும்…"
"நோயில் இருக்கையில் மைந்தரின் வலுவான தோள்களைக் காண்பது நிறைவளிக்கிறது"
"ததும்பித் துளித்து நிற்கும் அது கனத்து உதிர்ந்து விழுந்து வெடித்துச் சிதறுவதென்றால் அதுவே நிகழட்டும். ஊழ் அந்தத் தருணத்தை உருவாக்கியிருக்கிறதென்றே பொருள். வாழ்வெனும் வதையில் இருந்து இவ்வுயிர் விலகுமெனில் அதுவே நிகழ்க. அதுவே அவரது விடுதலையாகக்கூட இருக்கலாம். வாழ்க்கையைவிட இறப்பு இனிதாகும் தருணங்கள்"
"களத்தில் எதிரியைக் கொன்றமைக்காக வீரன் வருந்தவேண்டியதில்லை"
"மானுட அறத்தை வெல்வது யோகம் அல்ல. அதை யோகமெனக் கொள்ள நான் மதுராபுரியின் கம்சனும் அல்ல"
"உள்ளத்தை வென்றவனே ராஜயோகி எனப்படுகிறான். அரசப்பொறுப்பு என்பது எந்நிலையிலும் ஒரு யோகமே"
"போரில் நிகழ்வதையெல்லாம் எவரும் வாழ்வில் நிகர் செய்துவிடமுடியாது. கருணையாலோ தன்னிரக்கத்தாலோ அதிகாரத்தை விளங்கிக்கொள்ளமுடியாது என்பதே அரசுநூலின் முதல்விதி. அந்த எல்லையைக் கடக்காமல் எவரும் ஷத்ரியர் ஆகமுடியாது"
"ஆன்மாவில் சுமைகளை தூக்கி வைத்துக்கொள்வதுதான் எத்தனை எளிது” என்று சொல்லிக்கொண்டார்."
"பயணத்துக்கான வழியை எதிரிக்கும் அளிக்க வேண்டுமென்பதே முறை"
venmurasu.in